சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது…
மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனையொட்டி திரையரங்குகளில் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் பேனர் மீது பூ தூவி, பால் அபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே சென்னை ரோகிணி திரையரங்கிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் விசிட் அடித்ததால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தொடர்ந்து அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கம் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து மாவீரன் படத்தை கண்டு ரசித்தார்.