கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்த பாராட்டுகளைப் குவித்து வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.
இதையும் படியுங்கள் : சென்னை – திருநெல்வேலி இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கம்! தென்னக ரயில்வே அறிவிப்பு!
கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேற்று (அக். 25) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி, மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமி தன் தங்கையின் காலில் கொலுசு மாட்டும் காட்சி போன்ற சில காட்சிகள் மனதை நெகிழ வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மொழி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.







