மேகதாது அணை திட்டம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்து முடிவு – மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தகவல்

மேகதாது அணை உள்பட காவிரிப் படுகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்து அனுமதி அளிக்கப்படும் என மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். ஜூலை 20-ம் தேதி…

மேகதாது அணை உள்பட காவிரிப் படுகையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்து அனுமதி அளிக்கப்படும் என மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார்.

ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி. வில்சன் காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் மேகதாது ஒரு பகுதியாக இல்லை. எனினும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான கேள்வியை முன் வைத்திருந்தார். அதில் காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் மேகதாது ஒரு பகுதியாக இல்லை. எனி னும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் நிலைப்பாட்டை அம்மாநில முதலமைச்சர் வெளியடுத்துகிறார்.

இதுபோன்ற அணைகளால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பது மட்டுமின்றி இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ஹக்கா நீதிமன்ற தீர்ப்புகளை எதிரானது. கர்நாடக அரசின் இந்த செயலை தடுத்து நிறுத்துவதற்கான மத்திய அரசின் திட்டம் என்ன என்பது குறித்தும் எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.

திமுக எம்.பி. வில்சனின் இந்த கேள்விக்கு அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு அளித்துள்ள பதில் வருமாறு:

கர்நாடகத்தின் மேககே தாட்டு சமநிலை தீர்த்தேக்கம் மற்றும் குடி நீர் திட்டத்தின் சாத்திரக்கூறுக்கான அறிக்கை பத்திய நீர்வள ஆணையத்திடம் (சி.டபிள்யு.சி) சமர்ப்பிக்கபட்டது. கடந்த 24-10-2018-இல் விரிவான திட்ட அறிக்கையை(டிபி ஆர்) தயாரிப்பதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் சி.டபிள்யு.சி அனுமதியளித்தது.
குறிப்பாக, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் மாற்றியமைத்த தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுக்கு உட்பட்டே இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் நிபந்தனைகளாகும். இதற்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் பல்வேறு துரைகளின் கீழ் ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் பரிசிலனைக்குப் பின்னர் இந்த நிபந்தனைகளுடன் டி.பிஆர் தயாரிக்க கர்நாடகமாநிலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2019-ஆம் ஆடு ஜனவரியில் மேகதாது சமதிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் டி.பி.ஆர் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த டி.பி.ஆர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களின் நிகழ்ச்சி நிரவாக சேர்க்கப்பட்டது. இறுதியாக கடந்தாண்டு டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற காவிரிதீர் மேலாண்ணம ஆணையத்தின் 18- ஆவது கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள விவகாரம் குறித்து எடுத்து வைக்கப்பட்டது. இது தொடர்பான அனைத்து தரப்பு விவாதங்களுக்கு பின்னர், ஆணையக் கூட்டத்தில் காவிரிப் படுகையில் மேற் கொள்ளப்படும் மேகதாது அணை திட்டம் உள்ளிட்ட எந்தத் திட்டங்களும், தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்து அனுமதியளிக்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டும் என மத்திய இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு  தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.