தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாட்டு பாடி ஊக்கமளிக்க கவிஞர் வைரமுத்து முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும், இயக்குநர் பாரதிராஜா சூழ்நிலையில், ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘குற்றமே தண்டனை’, ‘திருச்சிற்றம்பலம்’ என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் திருவின் குரல் ஆகிய படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
மேலும் சமீபத்தில் ’மாடர்ன் லவ்’ தொடரின் சென்னை அத்தியாயம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த தொடரில் பாரதிராஜா உட்பட ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தது. மேலும் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இவ்வாறாக அந்த காலம் முதல் தற்போதைய இளைஞர்கள் வரை இயக்குனர் இமயம் என மனம் கூசாமல் புகழக்கூடிய பாரதிராஜாவிற்கு வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது. அவ்வாறு தற்போது பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும் இதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
82 வயதாகும் பாரதிராஜாவுக்கு சமீப நாட்களாக அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் உதவியை நாடி வருகிறார். அவரை அண்மையில் கவிஞர் வைரமுத்து சந்தித்துள்ளார். மேலும் அவரது பாடலால் தேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அந்த வீடியோவின் தொடக்கத்தில் வைரமுத்து “ நான் அண்மையில் பார்த்ததை விட உங்கள் உடல்நலம் தேறிவிட்டது. அதை உங்கள் முகம் சொல்கிறது. உங்களுக்கு ஒரு வாழ்த்து கவிதையை கொண்டு வந்திருக்கிறேன். அதை கேட்டு நீங்கள் ஆனந்தமடைய வேண்டும்” எனக்கூறி அந்த பாடலை பாட ஆரம்பிக்கிறார்.
"தென்மேற்குச் சீமையிலே…"
– பாடல் பாடி பாரதிராஜாவை தேற்றிய கவிஞர் வைரமுத்து#TamilCinema | #Cinema | #vairamuthu | #BharathiRaja | #Nayakan | #நாயகன் | #எழுந்துவாஇமயமே | @Vairamuthu | @offBharathiraja | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/YtPS02Rl7h
— News7 Tamil (@news7tamil) August 1, 2023
“தென்மேற்கு சீமையிலே, தேடிநகர் ஓரத்துல, பால்பாண்டியாக வந்தார் பாரதிராஜா, பிறந்த இடமோ கள்ளிக்காடு, பிரியம் வளர்த்தான் கலையோடு, வறுமை கொடுத்த வலியோடு, வாழ்வே அவனின் வழிபாடு” என பாடி முடித்தார் கவிஞர் வைரமுத்து.
இந்த பாடலில் மெய்சிலிர்த்த பாரதிராஜா, “இந்த பாடல் எனக்கு மேலும் வலிமை சேர்க்கிறது” என பெருமைபட்டுக்கொண்டார்.







