காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்கும் அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக காவிரி நீரை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளையும் சந்திக்க அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சரை சநதித்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, “முதலமைச்சர் நலமுடன் உள்ளார். ஒரு சில பரிசோதனைகள் அதிகாலை மேற்கொள்ள வேண்டும்., அது முடிந்த பின் வீடு திரும்புவார்.
நான் இன்று டெல்லி செல்கிறேன். மேகதாது நடுவே அணை கட்டும் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் ( CAUVERY WATER MANAGAEMENT) தான் பொறுப்பு. கூடுதலாக நீர் வேண்டும் என கேட்டு உள்ளோம் கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். ஜல்சக்தி அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளையும் சந்திக்க உள்ளேன். மேகதாது விவகாரம் என்று ஒன்றும் புதிது இல்லை. பத்திரிகை தான் குழப்பிக் கொண்டிருக்கின்றன.






