கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கும், அதுகுறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்பதற்காக தமிழ்நாடு அரசின் குழு இன்று டில்லி செல்கின்றது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16ஆவது கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டதுடன், கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ஜூன் 23 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் நடவடிக்கைக்கும், மேலாண்மை ஆணையத் திட்டத்திற்கும் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அமைச்சர் துரை முருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. நாளை காலை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று மாலை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் குழு டில்லி செல்கின்றது.
மேகாதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மேகதாது அணை கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்