மேகதாது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்துறைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை செயலாளர்கள் கூட்டத்தில் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தமிழ் நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
“உச்சநீதிமன்ற ஆணையின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மேகதாது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.







