தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் அணைக் கட்டப்படாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கே.ஆர்.சாகர், கபினி கீழ் உள்ள இடங்கள் எங்களுக்கு சொந்தமானது கர்நாடக கட்டிடம் கட்டுவது ஆக்கிரமிப்பு அமைச்சர் துரைமுருகன் பேட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி சென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக எந்த விவாதமும் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதி குழு வழங்கியது.
மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் சந்தித்த பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் இசைவு இல்லாமல் காவிரியில் அணை கட்டப்படாது என அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் மீண்டும் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் மேகதாது குறித்து விவாதிக்க உரிமை இல்லை. வழக்கறிஞர்கள் கருத்து கேட்டு அதன் படி செயல்படுவது முறையல்ல. கே.ஆர்.சாகர், கபினி அணைகளுக்கு கீழ் உள்ள இடம், தண்ணீர் எங்களுக்கு சொந்தமானது. அதில் கட்டுவது ஆக்கிரமிப்பு இது சரியல்ல. இதில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவிலும் மத்திய அரசும் பா.ஜ.க. என்று போக கூடாது.காவிரி மேலாண்மை வாரியத்தில் அஜண்டா வைத்தது தவறு என்பதை கூட்டத்தில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தார்.