அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் உலகில் உள்ள டென்னிஸ் வீரர்களில் மிக பிரபலமானவர். அவர் இதுவரை 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல் ஏழு விம்பிள்டன் கோப்பைகளையும், ஆறு அமெரிக்க ஓபன் டைட்டில்களையும் வென்றுள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் அவர் டென்னிஸ் பயிற்சியின் போது எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில் செரினாவுடன் சேர்ந்து அவரது 3 வயது மகள் அலெக்சிஸ் ஒலிம்பியாவும் பயிற்சி மேற்கொள்வது ரசிக்கும் வகையில் இருக்கிறது. அவர் தனது தாயை பார்த்து அவரை போலவே பந்தை குறிவைத்து அடிக்க முயற்சி செய்கிறார்.
அதன்பிறகு செரினா வில்லியம்ஸ் பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது, அவரது மகள் பந்துகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள செரினா, தனது Training Partner உடன் பயிற்சி மேற்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.







