எல்லை பிரச்னை… மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்ட கருத்து!

எல்லையில் சீனா, தனது படைகளை குறைத்தால் மட்டுமே இந்தியாவும் படைகளைக் குறைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல்…

எல்லையில் சீனா, தனது படைகளை குறைத்தால் மட்டுமே இந்தியாவும் படைகளைக் குறைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அரசு, நமது எல்லையில் கட்டமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகக் கூறினார். எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் எல்லையோரத்தில் உள்ள கிராமத்தினரின் தேவைகளுக்காகவே கட்டமைபுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சீனா உடனான எல்லைப் பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், எனினும் பேச்சுவார்த்தையின் வாயிலாக தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புவதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply