முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மக்கள் வெள்ளத்தின் நடுவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேர்கள் ஆடி அசைந்து அழகு மிளிர மிதந்து வரும் காட்சி வர்ணிக்க முடியாத அளவு காட்சியளிக்கிறது. மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஹரஹர சுந்தர மகாதேவ, சம்போ சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா எல்லோரும் இழுக்கணும் மகாதேவா என்று கோஷங்களை எழுப்பி பக்தர்கள் தேர்களை இழுப்பார்கள்.

மீனாட்சி அம்மன் கோவில் தேர் கி.பி.16ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் சுந்தரேசுவரர் சுவாமிக்கு பெரியதாகவும், மீனாட்சி அம்மனுக்கு சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டது. சுந்தரேஸ்வரின் தேரில் 64 திருவிளையாடல் புராணங்கள், திருவிழா பற்றிய சிறப்புகள் மரச்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக – சுகாதாரத்துறை செயலாளர்

Jeba Arul Robinson

’பிளே ஆப்’ சுற்று முனைப்பில் சிஎஸ்கே.. ஐதராபாத்துடன் இன்று மோதல்

Halley Karthik

இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமல்ல!

Vandhana