கடையநல்லுார் அருகே அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வார்டு பகுதியின் ஓரமாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாய சூழல் நிலவி வருகின்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்காக அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மருத்துவமனை வளாகம் சுற்றுச்சூழல் மாசுநிறைந்து காணப்படுவதாக தொடர் புகார்கள் ஏற்கனவே வந்த இந்தநிலையில், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் மற்றும் ஊசி, உபோயகப்படுத்தப்பட்ட மருந்து பொருட்களை மருத்துவ ஊழியர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல், ஆங்காங்கே மருத்துவமனை வளாகத்திலும் நோயாளிகளின் வார்டு பகுதியின் ஓரமாகவும் வீசிப்படுகிறது.
இதனால், குப்பை படலமாக மருத்துவ கழிவுகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே தேங்கி கிடந்த வருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாய சூழல் நிலவி வருவதாகவும், இது தொடர்பாக மருத்துவ உயரதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சமூக வளைதளங்களில் ஒரு வீடியோ போடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
-K.R. அனகா







