அக்டோபர் மாத இறுதிக்குள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு மாத காலத்திற்குள் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய சித்த மருத்துவமனை தொடங்கப்படும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிதாக திறக்கப்பட்ட 5 துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் உடன் காணொளி மூலம் பேசி நோய்க்கான மருந்து எடுக்கும் வகையில் டெலி மெடிசன் திட்டம் தொடங்கப்படும் என கூறினார். தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் சென்னையில் மட்டும் 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார். 40க்கும் மேற்பட்ட தெருக்களில் மூன்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தொற்று பாதித்தவர்களை தொடர்ந்து சென்னை பெருநகரக மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்துக் கொண்டு உள்ளது விரைவில் கட்டுக்குள் வரும் எனவும் நம்பிக்கை அளித்தார்.
தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது என்பது இல்லை இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் ஆயிரம் தொடங்கி 6 ஆயிரம் வரை இருக்கின்றன என அமைச்சர் விளக்கமளித்தார்.
தமிழ்நாட்டில் தொற்றின் வேகம் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக கூடி கொண்டே இருக்கின்றது. எனவே, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவத் துறை மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
ஜூலை 10ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு லட்சம் இடங்களில் 31 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மெடிகல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியாளர்கள் என 4,308 நபர்கள் வரை செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் இறுதிக்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்