ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் மருத்துவ சாதனங்கள் பூங்கா

ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் உருவாகும் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம்…

ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் உருவாகும் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி வேண்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்ததாக கூறிய அவர், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில், நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 350 எக்கர் நிலப்பரப்பில், சுமார் 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமையவிருப்பதாகவும், பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த மூலம் சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்ப்பதுடன், 10,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.