முக்கியச் செய்திகள் இந்தியா

“கன்னையாகுமார், கட்சிக்கு உண்மையாக இல்லை” -டி. ராஜா

கன்னையாகுமார், கட்சிக்கு உண்மையாக இல்லை என்றும், அவர் திடீரென கட்சியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அதன் நிர்வாக குழு உறுப்பினர் கன்னையாகுமார் விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ.யின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, கன்னையா குமார் கட்சியிலிருந்து தன்னை தானே விலக்கிக்கொண்டதாகவும், அவர் கம்யூனிச கொள்கையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவரின் தனிப்பட்ட முடிவு என்றும், சுரண்டல் இல்லாத புதிய சமுதாயத்தை படைக்க போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பிடித்திருந்தால் அவர் கட்சியிலிருந்து நிச்சயம் வெளியேறியிருக்க இருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற நடந்த கட்சியின் கூட்டத்தில், கூட கட்சியின் கொள்கையை வளர்க்க வேண்டும் என பேசியதாகவும், ஆனால், திடீரென அவர் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டார்.

சிபிஐ-யின் கன்னையா குமாருடன் குஜராத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 1 கோடியை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Niruban Chakkaaravarthi

பெட்ரோல் விலை உயர்வால் அமளி: நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு!

Jeba Arul Robinson

காங்கிரஸ் தவறாக மக்களை வழிநடத்துகிறது : ஜெ.பி.நட்டா

Jeba Arul Robinson