பஞ்சாப் காங்கிரசில் தொடரும் குழப்பம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்ததையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து…

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்ததையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து அம்ரீந்தர் சிங் டெல்லி சென்றுள்ளார்.

இந்த சம்பவங்கள் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதலமைச்சராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டார். அம்ரீந்தர் சிங் மற்றும் சித்து ஆகியோர் தொடர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்றுள்ள அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இந்த குற்றசாட்டை மறுத்துள்ள அம்ரீந்தர் சிங் தனது டெல்லி உள்ள முதலமைச்சர் இல்லத்தை காலி செய்யவே வந்ததாக தெரிவித்துள்ளார். சித்துவின் ராஜினாமாவைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் ரஜியா சுல்தானாவும் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்க்ரா பதவி விலகினார். சித்துவுக்கு ஆதரவாக ரஜியா சுல்தானா, யோகிந்தர் தொடர்ந்து பதவி விலகியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.