தமிழகத்தில் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு!

தமிழகத்தில் 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக ஒருவாரம் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் நிரம்பாமல் இருந்த இடங்களை நிரப்பும் வகையில் கூடுதலாக ஒரு வார…

தமிழகத்தில் 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்காக ஒருவாரம் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் நிரம்பாமல் இருந்த இடங்களை நிரப்பும் வகையில் கூடுதலாக ஒரு வார காலம் கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மருத்துவ கல்வி இயக்ககம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், கடந்த ஜனவரி 15ம் தேதியுடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில்,மருத்துவ படிப்பில் அரசு மருத்துவமனைகளில் 5 இடங்களும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 112 இடங்களும் காலியாக இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் பல் மருத்துவத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் 12 இடங்களும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 447 இடங்கள் காலியாக இருப்பதாகவும், எனவே இந்த இடங்களை நிரப்ப ஏதுவாக கூடுதலாக ஒரு வாரம் கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி, ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தமிழகத்தில் 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்புவதற்காக இன்று முதல் ஒருவார காலம் கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டதோடு, மருத்துவ கல்வி இயக்ககம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply