நாளை முதல் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ள திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரையை நாளை திருவண்ணாமலையில் தொடங்குகிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: