முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் – மா.சுப்ரமணியன்

மருத்துவக்கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில்  மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா மற்றும் தமிழ்மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சியில்
அமைச்சர்கள் மா.சுப்ரமணியம்,செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில்  பேசிய அமைச்சர்  மா.சுப்ரமணியன், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் தற்போநு இந்த மனநிலை மாணவர்களிடம் மாறி இருக்கிறது.  குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் முதலாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கியை, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் கொண்டு வந்து கொடுத்தத்து மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவத்தார்.

தொடர்ந்து பேசிய மா.சுப்ரமணியன் கடந்த ஆண்டு வரை மாணவர்களின் எண்ணிக்கை 150 இருந்தது. இந்த ஆண்டு ஐம்பது கூடுதல் மாணவர்களுக்கு சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது11 மருத்துவகல்லூரிகளரில் 1450 மாணவர்களை சேர்க்க ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் ஆண்டுதோறும் 10825 மாணவர்கள் தமிழகத்தில் சேர்க்கை நடக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கூட இந்த அளவில் மாணவர் சேர்க்கை இல்லை. தென்காசி,மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளில் அமைய வேண்டும் என கோரிக்கையை மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்து வலியுறத்தி வருகிறார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் என்பதே முதலமைச்சர் இலக்கு எனவும் தெரவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி மறைந்தார்

G SaravanaKumar

நுபுர் ஷர்மாவை கண்டித்த நீதிபதிகளுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு

Mohan Dass

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வரும் 28ம் தேதி திறப்பு!

EZHILARASAN D