முக்கியச் செய்திகள் தமிழகம்

”எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும்”- வைகோ!

எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும் என மதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டமானது அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி, தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையமான தாயகத்தில் நடைபெற்றது.

இதில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஊரில் கடைகோடியில் இருக்கும் தொண்டன் பதவியை எதிர்பார்ப்பதில்லை என்று குறிப்பிட்டார். எனவே எம்.எல்.ஏ, எம்.பி ஆசையை எல்லாம் விட்டு விடுங்கள் என்றும் வைகோ, கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

Saravana Kumar

மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் நடிகைகள் குஷ்பு கௌதமி ட்விட்

Jeba Arul Robinson

’நம்ம சென்னை’ செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் திறந்து வைத்தார்!

Jayapriya

Leave a Reply