பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!

திமுகவின் அழுத்தம் காரணமாகவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்…

திமுகவின் அழுத்தம் காரணமாகவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயம் முதல் பாதுகாப்புத்துறை வரை, அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் எனவும், பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில், 2 குற்றவாளிகள் தாமதமாக கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் அழுத்தம் காரணமாகவே குற்றவாளிகளான அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாகவும், சிபிஐ விரைந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில முக்கிய நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். நான்கு மாத காலத்திற்கு பின்பு திமுக ஆட்சி மலர்வது உறுதி என கூறிய அவர், அப்பொழுது நிச்சயமாக குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply