ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் ஆப்கான் அரசின் செய்தித்தொடர்பாளர் உட்பட் 3 பேர் உயிரிழந்தனர்.
தெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போர், அமைதி ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் இரு தரப்பினருக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தலைநகர் காபூலில் உள்ள கார்ட் இ நாவ் பகுதியில் இன்று காலை பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் வந்த காரை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை அரங்கேற்றினர். இதில் கார் வெடித்து சிதறியதில் அரசு செய்தித்தொடர்பாளர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை..