மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
கீழே விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் பட்சத்தில் அவரின் உடல்நிலை குறித்து தெரியவரும்.







