செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் திறனை பெற்றுள்ளது இந்தியா -இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் திறனை இந்தியா பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தில் இறங்கி சந்திரயான் – 3 விண்கலம் சாதனை படைத்ததை அடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் திறனை இந்தியா பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தில் இறங்கி சந்திரயான் – 3 விண்கலம் சாதனை படைத்ததை அடுத்து, கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், அங்குள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற இஸ்ரோ தயாராக உள்ளது என்றார். செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு பயணம் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றும், அதற்காக அதிக முதலீடு தேவை என்றும் கூறினார். விண்வெளித் துறை வளர்ச்சி மூலம்,ஒட்டு மொத்த தேசமும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.