மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மேதின அணிவகுப்பு மற்றும் மதுபோதைக்கு எதிரான பிரச்சார பேரணியில் மதுபோதைக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளுடன் 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே
தின அணிவகுப்பு மற்றும் மதுபோதைக்கு எதிரான பிரச்சார பேரணி நடைபெற்றது.
கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.
சிறுவர், சிறுமியரின் சிலம்பாட்டம், பரைஇசை, ட்ரம்ஸ் வாத்தியங்கள் முழங்க சென்ற பேரணியில் பள்ளி, கல்லூரிகளில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும், நிரந்தரமாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும், தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்த வேண்டும், கஞ்சாவை ஒழித்து மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும், மது இல்லாத நாட்டை வழிநடத்த வேண்டும் போன்ற போதைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோரிக்கை பதாகைகளை கைகளில்
ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டவாறு சென்றனர்.
-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்