முக்கியச் செய்திகள் விளையாட்டு

மும்பை டெஸ்ட்: மயங்க், சுப்மன் காயம், அஸ்வின் மீண்டும் அசத்தல்

மும்பை டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் மயங்க் அகர்வால், சுப்மன் கில் ஆகியோர் காயம் காரணமாக பீல்டிங் செய்ய மாட்டார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான, 2-வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 150 ரன்களும் அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பத்து விக்கெட் சாய்த்து சாதனைப் படைத்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களில் சுருண்டது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும் ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 2 வது இன்னிங் ஸை தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக வைத்துள்ளது.

இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது. இந்திய அணியின் மயங்க் அகர்வால், சுப்மன் கில் ஆகியோர் பீல்டிங் செய்யவில்லை, அவர்கள் காயம் காரணமாக பீல்டிங் செய்யவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 2 வது இன்னிங் ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. மூன்று விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். டாம் லாதம் 6 ரன்களிலும் வில் யங் 20 ரன்களிலும் ராஸ் டெய்லர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிட்செல் 34 ரன்களுடனும் ஹென்றி நிக்கோலஸ் 11 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

“நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

Jeba Arul Robinson

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது தவிர்க்கவியலாதது: ராணுவ தளபதி

Jayapriya

பாரதியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

Halley Karthik