உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன ராணுவ போர் விமானத்தின் டயர் மீட்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ பக்ஷிகாதலாப் பகுதியில் இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானப்படைத்தளத்திலிருந்து கடந்த 27ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு லாரி மூலம் ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், லக்னோவின் ஐஸ்யானா நகர் பகுதியில் லாரியிலிருந்து மீரஜ் ரக போர் விமானத்தின் டயர்களை காணாமல் போயுள்ளன.
இது தொடர்பாக ஐஸ்யானா நகர காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன டயர்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 4ம் தேதி பக்ஷி கி தலாப் விமானப் படை நிலையத்தில் டயருடன் இறங்கிய இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் சாலையில் இந்த டயரை கண்டுபிடித்ததாகக் கூறி, அது லாரி டயர் என்று நினைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








