”தெற்கில் உதித்த விடியல் மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும்..” என கர்நாடக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா , கே.ஜி.ஜார்ஜ் எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே , ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கண்டிரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மைதானத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் , மநீம தலைவர் கமல்ஹாசன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாஹ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிற்கு “Journey of a Civilization: Indus to Vaigai” புத்தகத்தை பரிசளித்தார்.
கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Hearty congratulations to Hon'ble @siddaramaiah avaru and Hon'ble @DKShivakumar avaru on taking oath as the Chief Minister and Deputy Chief Minister of Karnataka respectively.
I sincerely believe that the secular duo will take the state of #Karnataka to newer heights with their… pic.twitter.com/VxV6lRsskW
— M.K.Stalin (@mkstalin) May 20, 2023
இவர்கள் இருவரின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று கர்நாடகத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன். தெற்கில் இன்று உதித்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். பெங்களூரில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா அத்தகைய மாற்றத்திற்கான ஒரு அழைப்பு மணி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.







