தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.
https://twitter.com/DrTamilisaiGuv/status/1613946251275554816
2023ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மையையும், பாரம்பரிய உணவுதானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.







