மாவீரன் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 80 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவீரன் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மற்றொரு பக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் . SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது.
இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. மேலும், ஆகஸ்ட் 15 இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், #SK21 படத்தில் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் இணையத்தில் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி ஜிம்மில் உடற்பயிற்சி சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக்குடன் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தியாக பரவி வருகிறது.









