தாத்தா – பாட்டிக்கு சிலை வைத்து வழிபடும் உறவினர்கள்; ராசிபுரம் அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

ராசிபுரம் அருகே தாத்தா – பாட்டியின் ஆன்மா சாந்தியடைய அவர்களுக்கு சிலை வைத்து வழிபடும் உறவினர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம், தாண்டா கவுண்டன்புதூர் அருகேயுள்ள அத்திமரத்து…

ராசிபுரம் அருகே தாத்தா – பாட்டியின் ஆன்மா சாந்தியடைய அவர்களுக்கு சிலை வைத்து வழிபடும் உறவினர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம், தாண்டா கவுண்டன்புதூர் அருகேயுள்ள அத்திமரத்து குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யமுத்து – அய்யம்மாள் தம்பதி. அய்யமுத்து அப்பகுதியில் உள்ள இருசாயி கோயில் பூசாரியாக இருந்து மக்களுக்கு வாக்குச் சொல்லி வந்துள்ளார்.

அய்யம்மாள் கடந்த 2020 ம் ஆண்டு இறந்ததை அடுத்து 2022-ம் ஆண்டு பூசாரி அய்யமுத்துவும் இறந்தார். இந்நிலையில் இவர்களின் நினைவாக இருவருக்கும் சிலை வைத்து அவரது பேரன்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து வழிபட தவிர்க்கும் உறவினர்கள் மத்தியில் அவர்களுக்கு சிலை வைத்து வழிபடும் பேரன்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.