ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி; பட்டத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.5லட்சம் பரிசு!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் 4க்கு3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி, இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி, சென்னை…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் 4க்கு3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி, இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தியா-மலேசியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டி துவக்கம் முதல் இருஅணி வீரர்களும் துடிப்புடன் விளையாடினர். ஒரு கட்டத்தில் மலேசிய அணி 3க்கு1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள், ஆட்டநேர முடிவில் 4-க்கு3 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி,சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பரிசு கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், இந்திய அணியின் பயிற்சி குழுவினர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிறந்த கோலுக்கான விருதினை இந்திய அணி வீரர் கார்த்திக் செல்வம் பெற்றுக்கொண்டார். தொடரில் 29 கோல்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பீரித் சிங்கிற்கு, அதிக கோல் அடித்தவருக்கான விருதும், தொடர் நாயகன் விருது இந்தியாவின் மந்தீப் சிங்கிற்கும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.