சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் சிறப்பு அறிவிப்பு வெளியானது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த ஜீலை 2-ம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மாவீரன் படத்தின் ட்ரைலரில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
– Sivakarthikeyan#Maaveeran#VeerameJeyam #MaaveeranFromJuly14th pic.twitter.com/Nobb7HOIhC— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 11, 2023
நடிகர் விஜய் சேதுபதி அந்த ட்ரைலரில் “வீரமே ஜெயம்” என கூறியிருப்பார். தற்போது விஜய் சேதுபதி குரலில் வெளியான அந்த வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ”என் அன்பு சகோதரன் விஜய் சேதுபதி உங்கள் அன்பான செயலுக்கு நன்றி. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என பகிர்ந்து அது விஜய் சேதுபதியின் குரல் தான் என உறுதிபடுத்தியுள்ளார்.







