”அவர் ஒரு ட்ரக்…” தீபக் சஹாரை கலாய்த்த தோனி!

‘தீபக் சஹார் ஒரு போதைப்பொருள் போன்றவர். நம்முடன் இல்லாத போது, எங்கே போனார் என்று நினைக்கத் தோன்றும்.’ என்று சி.எஸ்.கே கேப்டன் தோனி கூறியுள்ளார். ‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி…

‘தீபக் சஹார் ஒரு போதைப்பொருள் போன்றவர். நம்முடன் இல்லாத போது, எங்கே போனார் என்று நினைக்கத் தோன்றும்.’ என்று சி.எஸ்.கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் தோனி சென்னை வந்தடைந்தார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி மேடையில் ரசிகர்கள் முன் பேசினார்.

அப்போது அவர் தனக்கும், சென்னை ரசிகர்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும், தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் படப்பிடிப்பு பற்றியும், நடிகர் யோகிபாபு பற்றியும் பேசினார். தொடர்ந்து அவர் சிஎஸ்கே அணி வீரர் தீபக் சஹார் குறித்து பேசுகையில் கூறியதாவது,

“அவரை பற்றி பேச வார்த்தைகளை என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஒரு போதைப்பொருள் போன்றவர். நம்முடன் இல்லாத போது, எங்கே போனார் என்று நினைக்கத் தோன்றும். நம்முடன் இருக்கும் போது அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் அவர் தற்போது முதிர்ச்சியடைந்து வருகிறார். அதற்கு நீண்ட காலமாகும். என்னுடைய மகள் ஜிவா இப்போது 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை அவர் 50 வயதில் பெற்று விடுவார். ஒயின் எப்படி நாளாக நாளாக சிறப்பாக இருக்கும் என்று கூறுவார்களோ, அதுபோலத் தான் அவரும். ஆனால் அந்த மதுவை என்னால் குடிக்க முடியாது, அவர் முதிர்ச்சியடைவதற்குள் எனக்கு வயதாகி விடும்.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.