சென்னையில் முகக்கவசம் கட்டாயம் – மாநகராட்சி உத்தரவு!

  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று…

 

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது என்பதை சுட்டிக்காட்டி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம்
கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள், வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் போன்ற வணிக வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொ துமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.