ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

நட்சத்திர வீராங்கனை மேரி கோம் வெற்றி

மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர் இந்திய வீராங்கனை மேரி கோம்.

குத்துச்சண்டைபோட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை பிரிவில் கலந்துகொண்டு அசத்தலான வெற்றியை தனது வசமாக்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதியம் 2.05 மணிக்கு போட்டிகள் தொங்கியது. ஆட்டம் தொடங்கிய முதலே அவரின் வேகமும், பன்ச்சுகளும் நேர்த்தியாக இருந்தன. குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் ஆட்டத்தை அது நினைவுப்படுத்தியது. தன்னை எதிர்த்து ஆடிய மிகுலினா ஹர்னான்டஸை அவர் 4-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றை போட்டி இன்று மதியம் 1.15 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2 வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற புள்ளி கணக்கில் அவர் வெற்றிபெற்றார்.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளான நேற்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில், மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கினார். நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார். தொடர்ந்து பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார்.

இதனிடையே, டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா இரண்டவாது சுற்றில் அசத்தலான வெற்றியை தன்வசமாக்கினார்.
மேலும், மகளிர் 59 கிலோ குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், மிகுலினா ஹர்னான்டஸை எளிதில் வீழ்த்தினர். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருக்குறளை மேற்கோள் காட்டி பொங்கல் விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

Saravana

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

Janani

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தொடங்கியது

G SaravanaKumar