பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று 83-வது பிறந்தநாளை கொண்டாடும் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ராமதாஸூக்கு தெரிவித்த வாழ்த்தில், பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.ராமதாசுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியும் வாதாடி வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்கள். மேலும், முதலமைச்சர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.







