அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!

வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி,…

வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும்
மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இதுவரை அகற்றாததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துளசியாபட்டணம் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேலும்  கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.