காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை,உள்ள பிரசித்திபெற்ற காரையார்…

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை,உள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது, இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6- ந்தேதி கால்நாட்டுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படும் மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி பொங்கலிட்டு வழிபடத் தொடங்கினர். காலை தொடங்கிய பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை வரை தொடர்ந்தது. மதியம் சுமார் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 1 மணிக்கு சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு படையலும் நடந்தது. , தளவாய் மாடசாமி மற்றும் பட்டவராயன் சுவாமி கோவிலில் பக்தர்கள் சங்கிலியால் தங்கள் மீது அடித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.