மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- முதலமைச்சர் உரை

வடமாநிலத்தின் சிப்பாய் கலகத்திற்கு முன்னரே 1806ல் வேலூர் புரட்சி நடந்திருக்கிறது என விடுதலை போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.…

வடமாநிலத்தின் சிப்பாய் கலகத்திற்கு முன்னரே 1806ல் வேலூர் புரட்சி நடந்திருக்கிறது என விடுதலை போராட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

தமிழ்நாட்டின் இந்தி மொழி தினிப்பு மற்றும் அதற்கு எதிராக நடந்த போராட்டங்களையும் நினவுக்கூறினார். அதேபோல திமுக கடந்து வந்த போராட்டங்களையும், மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி செயல்படுத்திய நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் குடியரசு தினவிழா ஊர்வலத்தில் தமிழ்நாட்டின் அலங்காரா ஊர்த்திகள் பங்கேற்காதது குறித்தும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து பேசினார்.

அப்போது “கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சியை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? இவர்கள் சொல்லும் சிப்பாய் கலகத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே 1806ல் வேலூர் புரட்சி நடந்திருக்கிறது” என்றும்,

“தமிழ்நாட்டை சேர்ந்த ராஜாஜிக்கே தமிழர்களைப் பற்றி புரிந்துகொள்ள 25 ஆண்டு காலம் ஆன நிலையில், இன்றைய பாஜகவினருக்கு எத்தனை நூற்றாண்டு ஆகும் என்பது தெரியாது” எனவும் விமர்சித்திருந்தார்.

மேலும், திமுக ஆட்சியிலிருக்கும் காலம் என்பது அண்ணை தமிழ் ஆட்சியிலிருக்கும் காலம் என்றும், திமுக உருவான நோக்கத்திலிருந்து இம்மியளவும் கட்சி தடம் மாறாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நமக்குள் ஓடுவது கருப்பு, சிவப்பு ரத்தம் என்றும் தமிழ் மற்றும் தமிழ்நாட்டை காப்பற்ற மாணவர்களே உங்களை நீங்கள் அற்பணித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறி தனது உரையை முடித்துகொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.