சவுக்கார் ஜானகி உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

தமிழ்நாட்டை சேர்ந்த சவுக்கார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன் உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சவுக்கார் ஜானகி,…

தமிழ்நாட்டை சேர்ந்த சவுக்கார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன் உட்பட 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான பத்ம விருது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சவுக்கார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியன், கலைத் துறையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மால் மற்றும் ஏ.கே.சி நடராஜன், சமூக சேவை துறையில் எஸ்.தாமோதரன், கலைத்துறையில் பல்லேஷ் பஜந்த்ரி மற்றும் வீராசுவாமி சேசைய்யா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல புதுச்சேரியை சேர்ந்த தவில் கொங்கம்பட்டு ஏ.வி.முருகையனுக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியமைக்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையை பொறுத்த அளவில் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அவனி லெகாரா மற்றும் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மைக்ரோசாப்ட்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையை பொறுத்த அளவில், சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைரஸ் பூனவல்லா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணா எல்லா மற்றும் அவரது மனைவியான ஸ்ரீமதி சுசித்ரா எல்லா ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 107 பத்ம ஸ்ரீ, 4 பத்ம விபூஷன் மற்றும் 17 பத்ம பூஷன் விருதுகள் என 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 13 பேரும், அடுத்தபடியாக மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 10 பேரும் பத்ம விருதுகளை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இந்த பட்டியலில் 7 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் பிப்பிரவரி 10ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.