தூத்துக்குடியில் நடைபெற்ற 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்களின் பாரம்பரிய வீர கலையான வர்ம அடவுமுறை நாட்டு அடி மற்றும் சுவடுகள் குறித்த பயிற்சி முகாமில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசான்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் அப்துல் கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில் பயிற்சியாளர் அருண்குமார் ஏற்பாட்டின் பேரில், அழிந்து வரும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்களின் பாரம்பரிய வீர கலைகளான வர்ம அடவுமுறை மற்றும் நாட்டு அடி சுவடுகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய வீர கலையின் அடவு முறைகளை செய்து காண்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும், இந்த பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர். இநிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை அப்துல்கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் ஆசான் அருண்குமார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சௌம்யா.மோ






