அரியலூர் அருகே 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அடைக்கலராஜ், புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அதனை அறிந்த சிறுமியின் தாய் செல்வி மற்றும் அடைக்கலராஜின் தந்தை ராமசாமி ஆகியோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் பிரசவத்திற்கு சிறுமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு துறையினரிடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அடைக்கலராஜை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அடைக்கலராஜின் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் தாய் செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.








