தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 49.5 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 287 ரன்களை எடுத்துள்ளது. இதில் அதிரடியாக விளையாடிய டிகாக் 124 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ப்ரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி இப்போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.