உலக சிஇஓ பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மார்க் ஸ்க்கர்பர்க்கு!

உலகின் முன்னணி சிஇஓ பட்டியலில் பேஸ்புக் சமூகவலைத்தள நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க்கு முதல் 100 பேர் கொண்ட பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் என சர்வதேச வேலைவாய்ப்பு நிறுவனமான கிளாஸ்டோர் நடத்திய ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்டோர்…

உலகின் முன்னணி சிஇஓ பட்டியலில் பேஸ்புக் சமூகவலைத்தள நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க்கு முதல் 100 பேர் கொண்ட பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் என சர்வதேச வேலைவாய்ப்பு நிறுவனமான கிளாஸ்டோர் நடத்திய ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்டோர் நிறுவனம் (Glassdoor) கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து உலகின் செல்வாக்கு மிகுந்த முன்னணி சிஇஓ குறித்த பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்நிலையில் 2020-ம் ஆண்டு மே முதல் 2021-ம் ஆண்டு மே வரை பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் 700 ஊழியர்களிடம் கிளாஸ்டோர் நிறுவனம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டது.

இந்த கருத்துக்கணிப்பில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க்கு வெறும் 88 % புள்ளிகள் பெற்று முதல் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறமுடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு இந்த பட்டியலில் 99 % புள்ளிகள் பெற்று மார்க் ஸ்க்கர்பர்க்கு முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் ஸ்க்கர்பர்க்குயின் தற்போதை பின்னடைவுக்கு அவர் கடந்த ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் ஆதரவாகச் செயல்பட்டது , அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தவறான தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டதும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கிளாஸ்டோர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா 97% புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார், அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி டிக் குக் 95 % புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். கிளாஸ்டோர் நிறுவனம் வெளியீடும் சிஇஓ பட்டியலில் டிக் குக் தொடர்ந்து 8-வது ஆண்டாக இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.