மும்பையில் உள்ள ஜெயின் கோயிலில் பிச்சைக்காரர்கள் உள்பட எவ்வித ஆவணமும் இல்லாத ஏழை மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜெயின் கோயில் ஒன்றில் தடுப்பூசி போடும் மையமாக மாற்றப்பட்டு, அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு மனிதாபமான அடிப்படையில் பிச்சைக்காரர்கள் உள்பட ஆதார் கார்டு உள்ளிட்ட எவ்வித ஆவணமும் இல்லாத ஏழை எளியோருக்கும் மருத்துவர்கள் உதவியோடு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் இவர்களின் இந்த மகத்தான பணிக்கு, அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.







