தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரை தவிர மக்கள் யாரும் வராமல் இருக்க தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.







