மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்பட டிரெய்லர் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்த டிரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.