விமானத்தில் ‘வாழை’ சிறுவர்கள்… புகைப்படத்தை பகிர்ந்த மாரி செல்வராஜ்! -#ViralPost

வாழை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை.…

வாழை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும், அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகி இன்றோடு பத்து நாட்கள் ஆகும் நிலையில், முதல்நாள் போலவே வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போதுவரை ரூ.16 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

வாழை படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு சிறுவர்களான பொன்வேல் மற்றும் ராகுல் ஆகியோருடன் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.