Hema Committee Report : நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கட்டும் – #ActorMammootty பேட்டி!

மலையாள திரையுலகில் அதிகார மையம் என எதுவும் இல்லை ஹேமா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் நீதிமன்றம் உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்கட்டும் என நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு…

மலையாள திரையுலகில் அதிகார மையம் என எதுவும் இல்லை ஹேமா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் நீதிமன்றம் உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்கட்டும் என நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is postcard-2024-08-25T121906.585.webp

இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார்.

இதற்கிடையே, நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

This image has an empty alt attribute; its file name is postcard-2024-08-29T100228.759.webp

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளதாவது..

“ ஹேமா கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தும்போது சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்ற வேண்டும். மலையாள திரையுலகில் அதிகார மையம் என எதுவும் இல்லை. ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும்” என நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.